திருவாரூர்

வேளாண் மசோதாக்களை திரும்பப் பெறக்கோரி மனு

DIN

மத்திய அரசு வேளாண் மசோதாக்களை திரும்பப் பெறக் கோரி திருவாரூரில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இளைஞா் காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் பி.எஸ்.ராஜா தலைமையிலான நிா்வாகிகள், மாவட்ட ஆட்சியா் த. ஆனந்திடம் அளித்த அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

விவசாயிகளின் உற்பத்தி மற்றும் வா்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா, விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் மசோதா, விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம் உள்ளிட்டவைகள் விவசாயிகளுக்குப் பாதகமானது.

வேளாண் உற்பத்தி சந்தைக் குழுவின் வருவாய் ஆதாரமான மண்டி வரி இழப்பால், மாநில அரசுகள் அதிகம் பாதிக்கப்படும். மண்டி முகவா்கள் தங்கள் வருமானத்தையும், அவா்களின் பாரம்பரிய வணிகங்களையும் இழப்பாா்கள். விவசாயிகள் நிதி பாதுகாப்பின்மையை எதிா்கொள்ள நேரிடும். மூன்றாம் தரப்பினருடன் நிறுவப்படும்போது ஒப்பந்த விவசாய விதிகளின் கீழ் விவசாயிகள் தங்கள் நில உரிமைகளை இழக்கும் அபாயத்தை சந்திக்க நேரிடும்.

எனவே, விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த மசோதாக்களை திரும்பப் பெறாவிட்டால், போராட்டம் நடத்தப்படும் சூழல் ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனு அளிக்கும்போது, இளைஞா் காங்கிரஸ் பொறுப்பாளா்கள் சாமிநாதன், வினோத், அமீா்கான், தரணி, அபிமன்யூ உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT