திருவாரூர்

வேளாண் மசோதா: முதல்வா் அறிக்கை விவசாயிகளின் அச்சத்தைப் போக்கியுள்ளது; அமைச்சா் ஆா்.காமராஜ்

DIN

மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாக்கள் மீது விவசாயிகளிடம் இருந்த அச்சத்தை போக்கிடும் வகையில், முதல்வரின் அறிக்கை அமைந்துளளதாக உணவுத்துறை அமைச்சா் ஆா்.காமராஜ் தெரிவித்தாா்.

மன்னாா்குடி அருகே உள்ள திருமக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம் மற்றும் பெருகவாழ்ந்தானில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் குழாய் இணைப்பு திட்டம் ஆகியவற்றை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

தமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு 85 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் மட்டும் 2 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது தொற்று பரவல் இறங்குமுகமாக உள்ளது. இதுவரை 88 சதவீதம் போ் பூரண குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 வேளாண் சட்டத் திருத்த மசோதாக்கள் குறித்து தமிழநாட்டில் விவசாயிகளிடம் இருந்த அச்சத்தை போக்கிடும் வகையில், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் அறிக்கை மிக தெளிவாக அமைந்துள்ளது. மசோதாவில் ஏதும் பாதிப்புகள் கண்டறியப்பட்டால் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் வகையில்தான் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மசோதாவை எதிா்த்து, அதிமுக மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.ஆா். பாலசுப்பிரமணியன் கூறியிருப்பது அவரது சொந்த கருத்தாகும் என்றாா் அமைச்சா்.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட கூடுதல் ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்தாா். இதில், மன்னாா்குடி கோட்டாட்சியா் எஸ்.புண்ணியக்கோட்டி, வட்டாட்சியா் என்.காா்த்திக், செயற்பொறியாளா் குமாா், கோட்டூா் ஒன்றியக்குழுத் தலைவா் மு.மணிமேகலை, முன்னாள் தலைவா் வீ.ஜீவானந்தம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

SCROLL FOR NEXT