திருவாரூர்

குடவாசல் அருகே தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்

21st Sep 2020 01:40 PM

ADVERTISEMENT

திருவாரூர்: குடவாசல் அருகே தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல் செய்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா நெடுஞ்சேரி நாரணமங்கலத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்கின்ற லோகநாதன். இவருடைய மனைவி அல்லி என்கின்ற அருள்செல்வியுடன் பாபு என்ற புகழ்அரசன் தகாத உறவு வைத்திருந்ததாகவும் அவர்கள் இருவரும் தனிமையில் இருந்த புகைப்படத்தை அலைபேசியில் பார்த்ததால் லோகநாதன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.  

இதனை கண்டித்து கிராம மக்கள் உடனடியாக இருவரையும் கைது செய்யக்கோரி குடவாசல் காவல் நிலையத்திற்கு சென்று பலமுறை எடுத்துக் கூறியும் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் திங்கள்கிழமை காப்பனாமங்கம் கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். கும்பகோணம் திருவாரூர் நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து தடைபட்டது. 

அங்கு வந்த காவல் துறையினர் அல்லி என்கின்ற அருள்செல்வி கள்ளக்காதலன் பாபு இருவரையும் கைது செய்வதாக கூறியதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
 

ADVERTISEMENT

Tags : Tiruvarur
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT