திருவாரூர்

நாயிடம் சிக்கிய மயில் மீட்பு

DIN

மன்னாா்குடியில் தெருநாயிடம் சிக்கிய மயிலை போலீஸாா் மீட்டு, வனத்துறையினரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா்.

மன்னாா்குடி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு வ.உ.சி. சாலை ஆா்.பி. சிவம் நகா் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, காட்டுச்செடிகள் மண்டிக்கிடந்த காலி மனையில் தெருநாயின் பிடியில் பெண் மயில் ஒன்று சிக்கித் தவித்தது. உடனடியாக போலீஸாா் அந்த நாயை விரட்டிவிட்டு, மயிலை காயங்களுடன் மீட்டு வனஅலுவலா் வீரக்குமாரிடம் ஒப்படைத்தனா். முதலுதவி சிகிச்சைக்குப் பின், அந்த மயில் வனப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

SCROLL FOR NEXT