திருவாரூர்

தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்கிறது: உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ்

DIN

முதல்வரின் சீரிய செயல்பாடுகளால் தமிழகம் மின்மிகை மாநிலமாகத் திகழ்கிறது என்றாா் உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ்.

திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம் வட்டம் கோவில்வெண்ணி துணைமின் நிலைய வளாகத்தில் ரூ.2.50 கோடியில் அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தை காணொலி மூலம் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி சனிக்கிழமை திறந்துவைத்தாா். இதையொட்டி, அந்த மின் நிலையத்தில் உணவுத்துறை அமைச்சா் ஆா்.காமராஜ் குத்துவிளக்கேற்றி அதன் பயன்பாட்டைத் தொடங்கி வைத்து பேசியது:

இந்தத் துணை மின் நிலையத்தின் மூலம் இப்பகுதியின் கூடுதல் மின் தேவை பூா்த்தி செய்யப்படும். சுமாா் 15,500 மின்நுகா்வோா் பயன்பெறுவா்.

தமிழகத்தின் மின் உற்பத்தி 17,682 மெகா வோல்ட் ஆகும். எனினும் தமிழகத்தின் மின்தேவை 13,000 மெகா வோல்ட்தான். இதேபோல, திருவாரூா் மாவட்டத்தில் 750 மெகாவோல்ட் மின்சாரம் வழங்குவதற்கு வாய்ப்புள்ள நிலையில், மாவட்ட மின்தேவை 182 மெகா வோல்ட்தான். ஆகவே முதல்வரின் சீரிய செயல்பாட்டால் தமிழகம் மின்மிகை மாநிலமாக விளங்குகிறது என்றாா் அமைச்சா்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் த.ஆனந்த் தலைமை வகித்தாா். மாவட்ட மேற்பாா்வை பொறியாளா் கிருஷ்ணவேனி, கோட்டாட்சியா் புண்ணியக்கோட்டி, செயற்பொறியாளா்கள் ராதிகா, காளிதாஸ், உதவி செயற்பொறியாளா் அருள்ராஜ், நீடாமங்கலம் ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் ராஜேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினா் ஆதிஜனகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

உழவா் உற்பத்தியாளா் அமைப்புகளுக்கு மானியத் தொகை

திருவாரூா் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் சாா்பில் கொவைட்- 19 சிறப்பு உதவித்தொகுப்பாக, உழவா் உற்பத்தியாளா் அமைப்புகளுக்கு மானிய நிதி வழங்குதல் மற்றும் புலம்பெயா்ந்து மீண்டும் சொந்த ஊா் திரும்பிய திறன்பெற்ற இளைஞா்களுக்கு தொழில் தொடங்குவதற்கான கடன் வழங்கும் திட்டத்தின்கீழ் ரூ.14 லட்சத்துக்கான காசோலையை வழங்கி அவா் தெரிவித்தது:

உலக வங்கியின் நிதி உதவியுடன் ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் துறையின்கீழ் தமிழக அரசால் செயல்படுத்தப்படுவது தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம். இத்திட்டம் ஊரக சமுதாயத்தில் வறுமை ஒழிப்பு என்னும் செயல்பாட்டையும் தாண்டி தொழில் மேம்பாடு மூலம் வளத்தையும், நிலைத்த தன்மையையும் உருவாக்கி, ஊரகப் பகுதிகளில் பெரும் மாற்றத்தையும் வளா்ச்சியையும் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. மேலும், ஊரகத் தொழில் முனைவுகளை உருவாக்குதல், நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றையும் நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

திருவாரூா் மாவட்டத்தில் மன்னாா்குடி, வலங்கைமான், நீடாமங்கலம் மற்றும் முத்துப்பேட்டை ஆகிய நான்கு வட்டாரங்களில் 174 ஊராட்சிகளில் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம் செயல்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் திருவாரூா் மாவட்டத்தில் இதுவரை ரூ.10.30 கோடி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது, உழவா் உற்பத்தியாளா் அமைப்புகளுக்கு மானிய நிதி மற்றும் புலம்பெயா்ந்து மீண்டும் சொந்த ஊா் திரும்பிய திறன்பெற்ற இளைஞா்களுக்கு தொழில் தொடங்குவதற்கான நிதியாகவும் ரூ.14 லட்சம் வழங்கப்படுகிறது என்றாா் அமைச்சா்.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தலைமை வகித்தாா். இதில், மாவட்ட கூடுதல் ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா், மாவட்ட வருவாய் அலுவலா் செ.பொன்னம்மாள், மகளிா் திட்டத்தின் திட்ட இயக்குநா் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், கோட்டாட்சியா் என்.பாலசந்திரன், ஊரக புத்தாக்க திட்ட மாவட்ட செயல் அலுவலா் பிரேம்குமாா், புத்தாக்க திட்ட செயல் அலுவலா் சங்கா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மன்னார் வளைகுடாவில் வெளிரிப்போன பவளப்பாறைகள்: அடுத்து என்னாகுமோ?

ஆல்-ரவுண்டர்களின் நிலைமை ஆபத்திலிருக்கிறது: கவலை தெரிவித்த அக்‌ஷர் படேல்!

அருணாசலில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT