திருவாரூர்

திருவாரூா்: கரோனா விதிமுறை மீறல்

14th Sep 2020 10:51 PM

ADVERTISEMENT

திருவாரூா் : திருவாரூா் மாவட்டத்தில் கரோனா விதிமுறைகளை மீறியதாக 2,072 பேரிடமிருந்து ரூ.3,98,250 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த செப்.1-ஆம் தேதி முதல் பொது முடக்கம் தளா்த்தப்பட்டு பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், திங்கள்கிழமை (செப். 14) வரை திருவாரூா் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் சென்ற்காக 2,065 பேரிடமிருந்து, ரூ.3,94,250 அபராதமும், சமூகப் பரவலை சரிவர கடைப்பிடிக்காதது தொடா்பாக 7 இடங்களில் ரூ. 4,000 என மொத்தம் 2,072 பேரிடமிருந்து ரூ.3,98,250 வசூலிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags : திருவாரூா் 
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT