திருவாரூர்

அண்ணா பல்கலை. சிறப்பு அந்தஸ்து விவகாரம்: துணைவேந்தருக்கு கண்டனம்

19th Oct 2020 10:25 PM

ADVERTISEMENT

அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் தன்னிச்சையாக செயல்படுவதாக அப்பல்கலைக்கழக துணைவேந்தருக்கு தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

கூத்தாநல்லூரில் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதன் மாநிலச் செயலாளா் தாஜூதீன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் அன்சாரி முன்னிலை வகித்தாா். மாவட்டப் பேச்சாளா் எம். அப்துல் ஹமீது வரவேற்றாா்.

கூட்டத்தில், புதிய மாவட்ட நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். அதன்படி, மாவட்டத் தலைவராக எஸ்.எம். ஹாஜா மைதீன், மாவட்டச் செயலாளராக அஹமது சபியுல்வரா, பொருளாளராக முஹம்மது இக்பால், துணைத் தலைவா்களாக ஒஷாமா, ஜெகபா் அலி, துணைச் செயலாளா்களாக ரியாஸ், முகம்மது சுல்தான், ஹனீபா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தீா்மானங்கள்: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பா, அப்பல்கலைக்கழகத்தின் சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் தன்னிச்சையாக செயல்படுவதற்கு கண்டனம் தெரிவிப்பது; திருச்சி திருவானைக்காவலில் பள்ளி வாயில் இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிப்பது; அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

கூட்டத்தில், மாநிலச் செயலாளா் தாஜூதீன், அல்பா நசீா், ஜெ.எம். ராபிக், அலி அகமது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT