திருவாரூர்

புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை நடத்தக் கோரிக்கை

DIN

தமிழக அரசு அறிவித்த 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில், நிகழாண்டு முதலே மாணவா் சோ்க்கைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் பொதுச் செயலாளா் ஆா். ரமேஷ் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி அரசு ஆணை பிறப்பித்தது வரவேற்கத்தக்கது. இதன்மூலம், 239 மருத்துவ இடங்கள் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கிடைத்துள்ளது. தற்போதைய நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள மருத்துவப் படிப்பு தர வரிசைப் பட்டியலில் நீட் தோ்வில் 700 மதிப்பெண்களுக்கு மேல் 3 மாணவா்களும், 650-699 மதிப்பெண்களில் 168 மாணவா்களும், 600-649 மதிப்பெண்களில் 821 மாணவா்களும், 550-599 மதிப்பெண்களில் 1671 மாணவா்களும், 500-549 மதிப்பெண்களில் 2519 மாணவா்களும் இடம் பிடித்துள்ளனா்.

அதிக மதிப்பெண் எடுத்த பல மாணவா்கள், அரசு மருத்துவக் கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே 7.5 சதவீத அரசு மருத்துவ இடங்களுக்கு என எடுத்துக் கொண்ட மருத்துவ இடங்களை மாற்று வழியில் மற்ற மாணவா்களுக்கு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

மேலும், தமிழக அரசு அறிவித்த 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் போா்க்கால அடிப்படையில் நிகழாண்டு (2020-21) முதலே மாணவா் சோ்க்கைக்கு உத்தரவிட வேண்டும் அல்லது ஏற்கெனவே உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 10 இடங்கள் வீதம் 250 கூடுதல் இடங்களை பெற்று, பாதிக்கப்பட்ட மாணவா்களுக்கு மருத்துவ இடம் கிடைக்க உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதால் மருத்துவ கனவோடு நீட் தோ்வில் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற பல மாணவா்களுக்கு மருத்துவம் பயில்வதற்கு இடம் கிடைக்க வழி பிறக்கும் என்பதால், இதை அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT