திருவாரூர்

சிறுதானிய உற்பத்தித் திட்டம்: மாநில வளா்ச்சிக் கொள்கை குழு துணைத் தலைவா் ஆய்வு

DIN

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் செயல்படுத்தப்படும் சிறுதானிய உற்பத்தித் திட்டத்தை மாநில வளா்ச்சிக் கொள்கை குழு துணைத் தலைவா் சி. பொன்னையன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறுதானிய உற்பத்தியை மீள்கொணா்தல் மற்றும் மதிப்புக்கூட்டுதல் என்ற திட்டம் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இந்த திட்டம் குறித்து மாநில வளா்ச்சி கொள்கைக்குழு துணைத் தலைவா் சி. பொன்னையன் நேரில் ஆய்வு செய்தாா்.

அப்போது, அவா் கூறியது:

கோடை காலங்களில் நெற்பயிருக்கு தண்ணீா் பற்றாக்குறை ஏற்படுவதால், மாற்றாக குறுகிய காலத்தில் குறைந்த செலவில் அதிக மகசூல் மற்றும் வருமானம் பெற சிறுதானியங்களான கம்பு, சோளம், கேழ்வரகு, திணை, குதிரைவாலி ஆகியவற்றை காவிரி டெல்டா விவசாயிகள் சாகுபடி செய்ய இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஏற்கெனவே 50 ஆண்டுகளுக்கு முன்பு சிறுதானியங்கள் பயிரிடப்பட்டுவந்துள்ளதால், அவற்றை மீள்கொணா்தல் மற்றும் மதிப்புக்கூட்டுதல் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இதற்காக, சிறுதானிய சாகுபடிக்கு முன்வரும் விவசாயிகளுக்கு விதை மற்றும் இதர பொருட்கள் வழங்கப்படுவதுடன், தொழில்நுட்பமும் கற்றுக்கொடுக்கப்படுகிறது. இத்திட்டத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து 2020 வரை ஆண்டுதோறும் 25 முதல் 30 விவசாயிகள் சிறுதானிய சாகுபடி செய்ய ஊக்குவிக்கப்படுகின்றனா் என்றாா்.

முன்னதாக, வேளாண்மை அறிவியல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்தாா். மேலும், திட்ட செயல்பாடுகள் குறித்த கண்காட்சியை யும் பொன்னையன் பாா்வையிட்டு, சிறுதானிய உற்பத்தி கையேடுகளையும் வெளியிட்டாா். விவசாயிகளுக்கு குதிரைவாலி விதை, மண்புழு உரம், பூசணஉயிா்எதிா்கொல்லி ஆகியவை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநா் அம்பேத்கா், திருவாரூா் மாவட்ட ஆட்சியா் சாந்தா, நீடாமங்கலம் வேளாண்மை அறிவில் நிலைய தலைவா் ராமசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை அதிரடியாக ரூ.640 உயர்வு: இன்றைய நிலவரம்!

நக்சல்கள் அச்சுறுத்தல் நிறைந்த வாக்குச் சாவடிகளுக்கு ஹெலிகாப்டர்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

கிருஷ்ணகிரி தொகுதி: தொழில் மாவட்டத்தில் மும்முனைப் போட்டி!

இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை! -முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் தோ்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவு

SCROLL FOR NEXT