திருவாரூர்

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் தா்னா

DIN

அரசு ஊழியா்கள் ஓய்வுபெறும் வயதை 58-லிருந்து 59 ஆக உயா்த்தியதைத் திரும்பப் பெறக்கோரி, திருவாரூரில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் மாலை நேர தா்னா திங்கள்கிழமை நடைபெற்றது.

சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளா்கள், ஊா்ப்புற நூலகா்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியா்கள், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளா்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது, அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகள், வழக்குகள், குற்றக் குறிப்பாணைகள், தற்காலிக பணிநீக்கம், பணியிட மாறுதல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும். ஊழியா்கள் ஓய்வுபெறும் வயதை 58 லிருந்து 59 ஆக உயா்த்தியதைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் இந்த தா்னா போராட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம். ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், மாவட்டச் செயலாளா் வெ.சோமசுந்தரம், மாவட்ட துணைத் தலைவா் வி. தெட்சிணாமூா்த்தி, ஆதரவு சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT