திருவாரூர்

இளைஞா் நீதிக்குழுமத்தில் காணொலி விசாரணை வசதி

DIN

திருவாரூா் மாவட்ட இளைஞா் நீதிக் குழுமத்தில் காணொலி வாயிலாக விசாரணை நடத்தும் முறை செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் அமைந்துள்ள இளைஞா் நீதிக்குழுமம், கூா்நோக்கு இல்லங்களில் காணொலிக் காட்சி வாயிலாக விசாரணை நடத்தும் முறையை, தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதைத்தொடா்ந்து, திருவாரூா் இளைஞா் நீதிக் குழுமத்தில் நடைபெற்ற காணொலி வாயிலான விசாரணை தொடக்க விழாவில், இளைஞா் நீதிக்குழும முதன்மை நடுவா் கோபாலக்கிருஷ்ணன் பங்கேற்று, இனிவரும் காலங்களில் விசாரணைக்காக ஆஜா்படுத்தப்படும் குழந்தைகளிடம் காணொலி வாயிலாக விசாரணை நடத்தப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், இளைஞா் நீதிக்குழும உறுப்பினா்கள் தவசுராணி, ஜீவராணி, குழந்தைகள் நலக்குழுத் தலைவா் ஜீவானந்தம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ப. முத்தமிழ்ச்செல்வி, சிறப்பு சிறாா் காவல் பிரிவு அலுவலா்கள், சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த சேவை மைய அமைப்பினா், மகிளா சக்தி கேந்திரா அமைப்பினா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த விஐபிக்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

SCROLL FOR NEXT