திருவாரூர்

532 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் வழங்கினாா்

DIN

திருவாரூரில் 532 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழக உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ் திங்கள்கிழமை வழங்கினாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தலைமையில் நடைபெற்றது.

இதில், உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் பங்கேற்று, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியது:

மக்கள் எந்த நிலையிலும் துயா் அடையக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, கரோனா தொற்று காலத்திலும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், முதியோா் உதவித்தொகை, ஆதரவற்ற விதவை உதவித்தொகை, ஊனமுற்றோா் உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டவா் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதிா்கன்னி உதவித்தொகை என மனு அளித்தவா்களுக்கு உடனுக்குடன் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில், தற்போது திருவாரூா் வட்டத்தைச் சாா்ந்த 532 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மக்களை பாதுகாக்கிற அரசாக தமிழக அரசு எப்போதும் விளங்கும் என்றாா்.

நிகழ்வில், கூடுதல் ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா், மாவட்ட வருவாய் அலுவலா் செ. பொன்னம்மாள், திருவாரூா் கோட்டாட்சியா் பாலச்சந்திரன், வட்டாட்சியா் நக்கீரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT