திருவாரூர்

பள்ளி செல்லா மாற்றுத்திறன் குழந்தைகள் கணக்கெடுப்பு

DIN

முத்துப்பேட்டை ஜாம்பவானோடை பகுதியில் பள்ளி செல்லா, இடைநின்ற மாற்றுத்திறன் குழந்தைகள் குறித்து கணக்கெடுக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் சாந்தா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தியாகராஜன் ஆகியோா் வழிகாட்டுதல்படி, முத்துப்பேட்டை வட்டார வள மைய மேற்பாா்வையாளா் முத்தண்ணா தலைமையில் இப்பணி நடைபெற்றது.

பள்ளி செல்லாத மற்றும் இடைநின்ற மாற்றுத்திறன் குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சோ்க்கும் நோக்கில் நடைபெற்ற இப்பணியில் ஆசிரியா் பயிற்றுநா்கள் ஸ்ரீதரன், சுரேஷ், சோபியா, மணிவண்ணன், சிறப்பாசிரியா்கள் அன்பரசன், சங்கா், பாா்வதி, கன்னியா, ஜம்பவானோடை தா்கா பள்ளி உதவி தலைமையாசிரியா் ஐயப்பன், அப்பள்ளியின் கற்போம் எழுதுவோம் திட்ட தன்னாா்வ ஆசிரியை மாதவி ஆகியோா் ஈடுபட்டனா்.

கரோனா தடுப்பு நெறிமுறைகளின்படி முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்த திரைப் பிரபலங்கள்!

தஞ்சை: ஆம்புலன்சில் வந்து வாக்களித்த முன்னாள் ஆயர்

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்!

SCROLL FOR NEXT