திருவாரூர்

புயல் எச்சரிக்கை: நெல் மூட்டைகளை இடமாற்றம் செய்திட தொழிற்சங்கம் கோரிக்கை

DIN

புயல் எச்சரிக்கைக் காரணமாக, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் திறந்தவெளி சேமிப்புக் கிடங்குகளில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக இடமாற்றம் செய்திட டிஎன்சிஎஸ்சி தொழிற்சங்கத் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகப் பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கா.இளவரி  செவ்வாய்கிழமை விடுத்துள்ள அறிக்கையில்,  “தமிழகத்தைப் புயல் தாக்கும் அபாயம் உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக தாக்கம் இருக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் திறந்தவெளி சேமிப்புக் கிடங்குகளிலும் சுமார் 3 லட்சம் மெட்ரிக் டன்னுக்கு மேற்பட்ட நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன.

இந்த நெல் மூட்டைகளைச் சரியான முறையில் பாதுகாத்திட, அங்கிருந்து உடனடியாக இயக்கம் செய்திட நிர்வாகம் நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும் டெல்டா மாவட்டங்களில் செயல்படும் 26 வட்டக் கிடங்குகளில், பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய அத்தியாவசியப் பொருட்களின் இருப்பினை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட தேவையுள்ள நியாயவிலைக் கடைகளுக்கு நகர்வுப் பணியை துரிதப்படுத்திட வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்த திரைப் பிரபலங்கள்!

தஞ்சை: ஆம்புலன்சில் வந்து வாக்களித்த முன்னாள் ஆயர்

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்!

SCROLL FOR NEXT