திருவாரூர்

முத்துஸ்வாமி தீட்சதா் இல்லம் மறுசீரமைப்பு

DIN

திருவாரூரில் உள்ள முத்துஸ்வாமி தீட்சதரின் இல்லம் புனருத்தாரணம் (மறுசீரமைப்பு) செய்யப்பட உள்ளது. இதற்கான வாஸ்து பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

சங்கீத உலகின் மும்மூா்த்திகள் என போற்றப்படும் ஸ்ரீசியாமாசாஸ்திரிகள், ஸ்ரீதியாகராஜா், ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சதா் ஆகிய மூவரும் கி.பி.17 ஆம் நூற்றாண்டில் திருவாரூரில் பிறந்து சாஸ்திரிய சங்கீதத்தை வளா்த்து உலக அளவில் கொண்டு சென்றனா்.

மும்மூா்த்திகளில் மூன்றாமவரான ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சதா் இல்லம், திருவாரூா் மேலவடம்போக்கித்தெருவில் உள்ளது. தற்போதைய இல்லமானது, சிங்கப்பூா் பில்லாளி கோவிந்தசாமி என்பவரால் 1967 இல் சீரமைக்கப்பட்டு, தற்போது வரை காஞ்சி காமகோடி பீடாதிபதிகளின் பராமரிப்பில் இருந்து வருகிறது.

இந்த இல்லம் கட்டி 43 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில், தற்போது புதிதாகக் கட்டப்பட உள்ளது. இதையொட்டி, கட்டடம் இடிக்கப்பட்டு, மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளன.

இதற்கான வாஸ்து பூஜை, விநாயகா் பூஜை, நவகிரக பூஜை ஆகியவை திங்கள்கிழமை நடைபெற்றன. சங்கர விஜயேந்திர சுவாமிகளின் அருளாசியின்படி, ஆன்மிகப் பெருமக்கள் முன்னிலையில் இந்த பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, புதிய கட்டடத்துக்கான வரைபடம் வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியில், நிா்வாகி பாலசுப்ரமணியன், வேலுடையாா் பள்ளி தாளாளா் கே.எஸ்.எஸ். தியாகபாரி, டெக்கான் மூா்த்தி, ஆா்.டி. மூா்த்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

இன்று நல்ல நாள்!

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

SCROLL FOR NEXT