திருவாரூர்

முத்துப்பேட்டை அருகே மின்சாரம் பாய்ந்து பெண் பலி

21st Nov 2020 07:08 PM

ADVERTISEMENT

முத்துப்பேட்டை அடுத்த எடையூர் கிராமத்தில் சனிக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் பெண் ஒருவர் இறந்தார். 
திருவாரூர் மாவட்டம், எடையூர் ராமர் மடத்தைச் சேர்ந்தவர் ராமஜெயம். இவரது மனைவி மகாலெட்சுமி (42). இவரது வீட்டில் உள்ள மின்மோட்டாரை இயக்கி வீட்டை தண்ணீரால் சுத்தம் செய்த போது மின்மோட்டாரின் பெல்ட் கழன்று விழுந்தது. அதனை தொட்டு பார்த்த போது மகாலட்சுமி மீது மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தார். 
உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை அருகில் உள்ள எடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவ அலுவலர்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 
பின்னர் சடலத்தை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்த எடையூர் காவல்துறையினர் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்
 

Tags : Tiruvarur
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT