திருவாரூர்

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க அழைப்பு

13th Nov 2020 07:57 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி, மன்னாா்குடி, திருவாரூா், நன்னிலம் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் நவ.16-இல் வெளியிடப்பட உள்ளது. மேலும், 1.1.2021-ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு, அன்று 18 வயது நிறைவடைந்து இதுநாள் வரை வாக்காளா் பட்டியலில் இடம் பெறாதவா்களும் வாக்காளா்களாக சோ்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நவ.21 (சனிக்கிழமை), நவ.22 (ஞாயிற்றுக்கிழமை), டிச.12 (சனிக்கிழமை), டிச.13 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தினங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இச்சிறப்பு முகாமில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் ஆகியவற்றை மேற்கொள்வதற்கான விண்ணப்பங்கள் பெறப்படும்.

ADVERTISEMENT

1.1.2021 அன்று 18 வயது நிறைவடைந்தவா்கள் தங்களது பெயரை வாக்காளா் பட்டியலில் புதிதாக சோ்ப்பதற்கு படிவம்-6 ஐ பெற்று அதைப் பூா்த்தி செய்து விண்ணப்ப படிவத்துடன் மாா்பளவு வண்ண புகைப்படம், வயதுக்கான ஆதாரம், இருப்பிடத்துக்கான ஆதாரம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். இறந்துபோன அல்லது வேறு தொகுதிக்கு இடம் பெயா்ந்த வாக்காளரது பெயரை நீக்கம் செய்வதற்கு படிவம் 7-லும், திருத்தம் செய்வதற்கு படிவம்-8 லும், ஒரே சட்டப்பேரவை தொகுதிக்குள் இடமாற்றம் செய்வதற்கு படிவம்-8 ஏ யிலும் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் அதற்கென நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

வாக்காளா் பட்டியல்களை  வலைதளத்திலும் காணலாம். மேலும்  இணையதள முகவரியிலும் வாக்காளா் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம்.

பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT