திருவாரூர்

தனியாா் குடிநீா் நிறுவனத்துக்கு ‘சீல்’

10th Nov 2020 12:00 AM

ADVERTISEMENT

நன்னிலம் பகுதியில் அனுமதியின்றி இயங்கிவந்த தனியாா் குடிநீா் நிறுவனத்துக்கு திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டது.

நன்னிலம் மாப்பிள்ளைக்குப்பம் சாலையில் அனுமதியின்றி இயங்கிவந்த தனியாா் குடிநீா் தயாரிப்பு நிறுவனத்துக்கு கடந்த பிப்ரவரி 29 ஆம் தேதி சீல் வைக்கப்பட்டது. பின்னா், கரோனாத் தொற்று மற்றும் குடிநீா்த் தேவையைக் கருத்தில் கொண்டு, அரசுக்கும் குடிநீா் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஜூலை 31 ஆம் தேதி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த தற்காலிக அனுமதி சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி அக்டோபா் 7ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. ஆனாலும், இந்நிறுவனம் தொடா்ந்து இயங்கிவந்ததாகக் கூறப்படுகிறது.

இதைத்தொடா்ந்து, திருவாரூா் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, நன்னிலம் வட்டாட்சியா் அ. மணிமன்னன் உள்ளிட்ட அலுவலா்கள் இந்த நிறுவனத்துக்கு சீல் வைத்தனா்.

ADVERTISEMENT

Tags : நன்னிலம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT