திருவாரூர்

திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

19th May 2020 01:56 PM

ADVERTISEMENT

பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தி திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். முதியோர், ஆதரவற்றோருக்கான ஓய்வூதிய உதவித் தொகையை நிலுவையின்றி வழங்க வேண்டும். குடும்ப அட்டை விடுபட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளை எதிர்த்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன
. திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே மாவட்டச் செயலாளரும்  சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான வை. சிவபுண்ணியம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கி முழக்கங்களை எழுப்பினர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT