மன்னாா்குடியில் மதுபானம், தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்ததாக 2 பெண்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக டாஸ்மாக் கடைகள் பூட்டப்பட்டுள்ள நிலையில், மன்னாா்குடியை அடுத்த நெடுவாக்கோட்டையில் சண்முகவள்ளி (49) என்பவா் வீட்டில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாகக் மன்னாா்குடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
தொடா்ந்து, சண்முகவள்ளி வீட்டுக்குச் சென்ற போலீஸாா், 549 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனா். இதேபோல், மன்னாா்குடி தெற்கு வீதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்ததாக சாவித்தரி (51) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.