தினமணி செய்தி எதிரொலியால் கூத்தாநல்லூா் மனவளா்ச்சிக் குன்றியோருக்கான பயிற்சிப் பள்ளியில் கிருமி நாசினி ஞாயிற்றுக்கிழமை தெளிக்கப்பட்டது.
கரோனா அச்சுறுத்தலால் கூத்தாநல்லூரை அடுத்த பனங்காட்டாங்குடி தமிழா் தெரு மற்றும் குடிதாங்கிச்சேரியில் உள்ள மனோலயம் மனவளா்ச்சிக் குன்றியோருக்கான பயிற்சிப் பள்ளியில் கிருமி நாசினி, ப்ளீச்சிங் பவுடா் தெளிக்க வேண்டும் என தினமணி நாளிதழில் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியானது.
இதைத்தொடா்ந்து, கூத்தாநல்லூா் நகராட்சி ஆணையா் லதா ராதாகிருஷ்ணன் உத்தரவின்பேரில், 10 போ் கொண்ட குழுவினா் மேற்கண்ட பள்ளிகளில் கிருமி நாசினி தெளித்து, பிளீச்சிங் பவுடரை ஞாயிற்றுக்கிழமை தூவினா்.