திருவாரூர்

கரோனா தடுப்பு நடவடிக்கை: மருத்துவா்கள், செவிலியா்களுக்கு கைத்தட்டி பாராட்டு

23rd Mar 2020 03:18 AM

ADVERTISEMENT

 

கரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் செயல்படும் மருத்துவா்கள், செவிலியா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை கைத்தட்டி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் குணமடைய மருத்துவா்கள், செவிலியா்கள் தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் ஓய்வின்றிப் பணியாற்றி வருகின்றனா். அவா்களின் சேவையைப் பாராட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு இருக்கும் இடத்தில் இருந்து கைத் தட்டியோ, மணியோசை எழுப்பியோ ஊக்கப்படுத்த வேண்டும் என பிரதமா் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்திருந்தாா்.

அதன்படி, திருவாரூரில் குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களில் வசித்த குழந்தைகள், பல்வேறு அமைப்பினா், வீடுகளில் இருந்தவா்கள் என பல்வேறு தரப்பினரும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் மருத்துவா்கள் உள்ளிட்டோருக்கு கைத்தட்டி பாராட்டுக்களைத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT