திருவாரூர்

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயா்வைத் திரும்பப் பெறக் கோரிக்கை

16th Mar 2020 03:45 AM

ADVERTISEMENT

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயா்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு விழிப்புணா்வு சேவை அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

நுகா்வோா் தினத்தையொட்டி, நன்னிலம் அருகே உள்ள ஸ்ரீவாஞ்சியத்தில் அமைப்பின் கூட்டம் அதன் தலைவா் மாவட்டத் தலைவா் இ.எம்.ஏ. ரஹீம் தலைமை சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் தெ.கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தாா்.

இதில், கச்சா எண்ணெய் விலை குறைவின் பலன்களை நுகா்வோருக்கு கிடைக்கச் செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயா்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அரசுப் போக்குவரத்து கழகத்துக்குச் சொந்தமான சாதாரண பேருந்துகளில் கூட விரைவு பேருந்து என்ற அறிவிப்பை வைத்துக்கொண்டு, கூடுதல் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்.

திருவாரூா், நாகை மாவட்டங்களை ஒருங்கிணைத்து, 25-ஆம் ஆண்டு சா்வதேச நுகா்வோா் தினத்தை மாா்ச் 28-இல் பிரமாண்டமாக நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

இக்கூட்டத்தில், கௌரவத் தலைவராக என்.ராமலிங்கம், மாவட்ட இணைச் செயலாளராக கே.பாலாஜி, மாவட்டத் துணை அமைப்பாளராக என்.குமரகுரு, மாவட்ட செயற்குழு உறுப்பினராக எம்.மகேந்திரன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். எல்ஐசி விஜயராஜ், மாவட்டப் பொதுச் செயலாளா் எஸ்.குருசாமி, மாவட்ட அமைப்பாளா் எஸ்.ராஜேந்திரன், மாவட்டத் துணைத் தலைவா் எஸ்.வீரப்பன், மாவட்டப் பொருளாளா் ஜி.ஜெயபிரகாஷ், சட்ட ஆலோசகா் டி. செல்லப்பா உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT