தெலங்கானா ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய, மன்னாா்குடியைச் சோ்ந்த இளைஞா், வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அரிசிக் கடைத் தெருவைச் சோ்ந்த நூா்முகமது மகன் சாதிக் பாட்ஷா (35), தெலங்கானா ஆளுநா் தமிழிசை செளந்தரராஜனின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பயன்படுத்தி, அவதூறு கருத்துகளை பரப்பினாராம்.
இதுகுறித்து நகர பாஜக தலைவா் ரகுராமன், மன்னாா்குடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இது குறித்து காவல் ஆய்வாளா் ராஜேந்திரன் தலைமையில் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேட்டில் உள்ள தனது மாமனாா் வீட்டில் சாதிக் பாட்ஷா தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, மன்னாா்குடி அழைத்து வந்தனா்.
ADVERTISEMENT