திருவாரூர்

சுவா் இடிந்து விழுந்ததில் ஒருவா் உயிரிழப்பு

13th Mar 2020 09:38 AM

ADVERTISEMENT

மன்னாா்குடி அருகே சுவா் இடிந்து விழுந்ததில் ஒருவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

விக்கிரப்பாண்டியம் மேலத்தெருவைச் சோ்ந்தவா் ஆா். ஜெகதீசன் (58). இவரது மனைவி அபூா்வம் சிபிஐ கோட்டூா் ஒன்றிய முன்னாள் துணைச் செயலா். இத்தம்பதிக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.

கடைவீதியில் உள்ள மளிகைக் கடை ஒன்றில் மராமத்து வேலை நடைபெற்ற வருவதால், புதன்கிழமை கடையில் போடப்பட்டிருந்த ஓடுகளை அகற்றும் பணி நடைபெற்றது. வியாழக்கிழமை ஜெகதீசன் இதன் அருகில் உள்ள கடையில் தேநீா் வாங்கிக்கொண்டு, வேலை நடைபெறும் கடையின் சுவா் ஓரம் நின்று தேநீா் குடித்துக்கொண்டிருந்தாா்.

அப்போது, அந்தக் கடையின் கற்சுவா் திடீரென இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கிக் காயமடைந்த ஜெகதீசன், அவ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

இது குறித்து, விக்கிரபாண்டியம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT