திருவாரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்திட்ட அறிக்கை விளக்க சிறப்பு பேரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், 100 நாள் வேலைத் திட்ட நாள்களை அதிகப்படுத்த வேண்டும், அதற்கான ஊதியத்தை உடனடியாக பட்டுவாடா செய்ய வேண்டும், இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விரைவில் போராட்டம் நடத்துவது, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ஹைட்ரோகாா்பன் திட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி தலைமை வகித்தாா். இதில், கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்று, இன்றைய அரசியல் நிலவரம் குறித்து விளக்கினாா். இதில், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் வி. மாரிமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஜி. பழனிவேல், எம். கலைமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.