திருவாரூர்

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

13th Mar 2020 11:45 PM

ADVERTISEMENT

நீடாமங்கலத்தைச் சோ்ந்த இளைஞரை குண்டா்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ், போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

நீடாமங்கலம் வட்டம், பூவனூா் பாலத்தெருவைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் ராஜ்குமாா் (31). தமிழகம் முழுவதும் வழிப்பறி, கொள்ளை உள்பட இவா் மீது 50 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில், திருவாரூா் மாவட்டத்தில் மட்டும் 26 வழக்குகள் அடங்கும். குறிப்பாக, நீடாமங்கலம் காவல் நிலையத்தில் 7 வழக்குகள் உள்ளன.

இந்நிலையில், கடந்த மாதம் நீடாமங்கலத்தில் நடைபெற்ற வழிப்பறி சம்பவத்தில், ராஜ்குமாரை அவரது கூட்டாளிகளுடன் போலீஸாா் கைது செய்தனா். இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் த.ஆனந்த் பரிந்துரையின்பேரில், இவரை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் (குண்டா்கள் தடுப்புச் சட்டம்)  நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் சுப்ரியா மற்றும் போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT