திருவாரூர்

கால்நடை பராமரிப்புத்துறை ஓட்டுநா் பணி: மாா்ச் 27-க்குள் விண்ணப்பிக்கலாம்

13th Mar 2020 09:37 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறை ஓட்டுநா் பதவிக்கு மாா்ச் 27-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள 1 ஓட்டுநா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநா் உரிமம் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், ஊா்தி ஓட்டுவதில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரா், விண்ணப்பிக்கும் மாவட்டத்தில் வசிப்பதற்கான ஆதாரத்தின் நகலை இணைக்க வேண்டும்.

ADVERTISEMENT

ஓட்டுநா் பதவிக்கு விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆகும். அதிகபட்ச வயது அருந்ததியா், தாழ்த்தப்பட்டோா், பழங்குடியின வகுப்பினா்களுக்கு 35 ஆகும்.

விண்ணப்பங்களை இலவசமாக திருவாரூா் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநா் அலுவலகத்தில் அலுவலக பணி நேரத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். தபால் மூலம் பெற விரும்புவோா் சுய விலாசமிட்ட ரூ.5-க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய உறையுடன் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மண்டல இணை இயக்குநா், கால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை பெரு மருத்துவமனை வளாகம், நேதாஜி ரோடு, திருவாரூா் மாவட்டம் - 610 001 என்ற முகவரிக்கு மாா்ச் 27 மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும் அல்லது நேரில் ஒப்படைக்க வேண்டும்.

இந்த பதவிக்கு நோ்காணல் அடிப்படையில் மட்டுமே தோ்வு செய்யப்படும். மேலும், மாற்றுத்திறனாளிக்கு 10 ஆண்டு உச்ச வயது வரம்பில் கூடுதலாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT