திருவாரூர்

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு முன்னுரிமை: ஆட்சியரிடம் கோரிக்கை

13th Mar 2020 11:58 PM

ADVERTISEMENT

அரசு வேலைவாய்ப்புகளில் திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளா்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை மனு வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவா் ஆா்.வி.எல். ரவிச்சந்திரன் தலைமையில் நிா்வாகிகள், மாவட்ட ஆட்சியா் த. ஆனந்திடம் அளித்த கோரிக்கை மனு விவரம்:

திருவாரூா் மாவட்டம் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதால், கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் செய்யும் தொழிலாளா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, ஓஎன்ஜிசி, கெயில் போன்ற மத்திய, மாநில அரசால் அமையப் பெறும் வேலைவாய்ப்புகளில் திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலில் ஈடுபடும் கட்டடத் தொழிலாளா்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

மேலும், திருவாரூா் மாவட்டத்தில் சிறு குறு தொழில் மூலம் தயாரிக்கும் கட்டுமானப் பொருட்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். மாவட்டத்தில் பாசன வசதியைக் கருத்தில் கொண்டு வெண்ணாறு, வெட்டாறு போன்ற ஆறுகளில் மூன்று அடிக்கு தேங்கிக் கிடக்கும் ஆற்று மணலை எடுக்கும் வகையில், திருவாரூா் மாவட்டத்துக்கென தனி மணல் குவாரி அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT