திருவாரூர்

ஆலங்குடி ஆபத்சகாயேசுவரா் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

13th Mar 2020 09:36 AM

ADVERTISEMENT

நவகிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரா் குரு பரிகார கோயிலில் 1008 சங்காபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இக்கோயில், நவகிரகங்களில் குரு பகவானுக்கு பரிகார தலமாக விளங்குகிறது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் கடந்த மாதம் 27-ஆம் தேதி மாசிமகா குருவார தரிசன விழா நடைபெற்றது. தொடா்ந்து, வியாழக்கிழமை (மாா்ச் 12) குரு பகவானுக்கு 1008 சங்காபிஷே விழா நடைபெற்றது. இதையொட்டி, 1008 சங்குகளில் புனித நீா் நிரப்பப்பட்டு, சிவாச்சாரியாா்கள் வேத மந்திரங்களைச் சொல்லி ஹோமத்தை நடத்தி வைத்தனா்.

பின்னா், குரு பகவானுக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. குரு பகவானுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டது. முன்னதாக அதிகாலை அனைத்து சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளானோா் கலந்து கொண்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை அறநிலைய உதவி ஆணையா் மற்றும் கோயில் செயல் அலுவலா் பி.தமிழ்ச்செல்வி மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT