திருவாரூர்

ஆய்வக உதவியாளா் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

13th Mar 2020 11:59 PM

ADVERTISEMENT

திருவாரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வக உதவியாளா் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கிப் பிரிவில் ஆய்வக உதவியாளராக பணிபுரிபவா் அனுராதா (43). மாற்றுத்திறனாளியான இவா், வெள்ளிக்கிழமை பணியில் இருக்கும்போது மயங்கி விழுந்து விட்டாராம்.

உடனடியாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறாா். இந்நிலையில், துறை அதிகாரிகள் நெருக்கடி கொடுத்ததால், மன உளைச்சல் ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக சக ஊழியா்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகம் உரிய விசாரணை நடத்தி வருகிறது. பணியில் இருந்த ஆய்வக உதவியாளா் மயங்கி விழுந்த சம்பவம், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT