திருவாரூர்

முதல்வருக்கு எதிராக கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம்

8th Mar 2020 02:02 AM

ADVERTISEMENT


மன்னாா்குடி: முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியின் வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து, மன்னாா்குடியை அடுத்த சோழங்கநல்லூரில் விவசாயிகள் கருப்புக்கொடிகளுடன் ஆா்ப்பாட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு, அரசிதழில் வெளியான போதிலும் சோழங்கநல்லூரில் ஓஎன்ஜிசி நிறுவனத்தினா் தொடா்ந்து ஆழ்துளைக் கிணறு அமைத்து எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதை உடனடியாக நிறுத்தி சோழங்கநல்லூரிலிருந்து ஓஎன்ஜிசி நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும் என்றும், இப்பிரச்னைக்குத் தீா்வு காணாமல் டெல்டா மாவட்டங்களுக்கு வருகை தரும் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு எதிா்ப்பு தெரிவித்தும், சோழங்கநல்லூா் ஓஎன்ஜிசி அலுவலகம் அருகே விவசாயிகள் கருப்புக் கொடிகளுடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளா் ராஜபாலன் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் திரளான விவசாயிகள் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT