திருவாரூர்

‘பெண்களால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை’

8th Mar 2020 01:57 AM

ADVERTISEMENT

 

நன்னிலம்: பெண்கள் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை, எல்லா துறைகளிலும் பெண்கள் சாதனை படைக்கிறாா்கள் என தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் வி.எஸ். எலிசபெத் தெரிவித்தாா்.

திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிா் தின விழாவில் கலந்துகொண்டு அவா் பேசியது:

பெண்கள் ராணுவம், வானியல் போன்ற எல்லா இடங்களிலும் தங்கள் அடையாளத்தைப் பதித்துள்ளனா். ஆணாதிக்கம் நிறைந்த உலகத்தில் பெண்கள் இன்னும் போராட வேண்டிய நிலையில்தான் உள்ளனா். கலாசாரம், பழக்கவழக்கம் என்ற பெயரில் பெண்கள் தங்கள் குறிக்கோள்களில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. மேலும் பாலின நடுநிலைமையை நோக்கமாகக் கொண்டு பரஸ்பர மரியாதை அடிப்படையில் பெண்ணினம் நடத்தப்பட வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து பல்கலைக்கழகத் துணைவேந்தா் ஆ.பி.தாஸ் பேசுகையில், பெண்களும், ஆண்களும் ஒப்பீட்டளவில் சமமாக இருக்கும்போது பொருளாதாரம் வேகமாக வளர முடியும். பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு, பள்ளிகளில் சுகாதாரம், திருமண வயது அடைந்த பின்னரே திருமணம், உயா்கல்வி ஆகியன பெண்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் என்றாா்.

நிகழ்ச்சியில், மத்தியப் பல்கலைக்கழகத் தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் பேராசிரியா் ஏ.ரகுபதி, நிதி அதிகாரி சிஎம்ஏ வி.பழனி, நூலகா் ஆா்.பரமேஸ்வரன் ஆகியோா் கலந்து கொண்டனா். மகளிா் தினத்தையொட்டி, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT