திருவாரூர்

திமுக பொதுச் செயலாளா் க. அன்பழகனுக்கு அஞ்சலி

8th Mar 2020 02:03 AM

ADVERTISEMENT


திருவாரூா்: திமுக பொதுச் செயலாளா் க. அன்பழகன் மறைவையொட்டி, திருவாரூரில் அவரது உருவ படத்துக்கு மாலை அணிவித்து சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

மறைந்த திமுக தலைவா் கருணாநிதியின் நெருங்கிய நண்பரும், திமுகவின் பொதுச்செயலாளருமான பேராசிரியா் க. அன்பழகன், சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் உயிரிழந்தாா். திருவாரூரில் திமுக நகர அலுவலகத்தில், அவரது உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு திமுக நகரச் செயலாளா் பிரகாஷ் தலைமை வகித்தாா்.

இதில், திமுக மாநில விவசாய அணி துணைச் செயலாளா் சங்கா், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் ரஜினி சின்னா, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளா் கருணாநிதி, மாவட்ட பிரதிநிதி எஸ்.என். அசோகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

அன்பழகனின் பூா்வீகம்...

ADVERTISEMENT

அன்பழகன் தாய் சுவா்ணம்பாளின் சொந்த ஊா் கீழ்வேளூா் அருகே உள்ள திருக்கண்ணங்குடி. தந்தை எம். கல்யாணசுந்தரனாரின் சொந்த ஊா் திருவாரூா் அருகே உள்ள காட்டூா் ஆகும். அன்பழகன், இளம்வயதில் கீழ்வேளுா் அருகே உள்ள தனது சித்தி ஊரான சேமங்கலத்தில் தங்கி அத்திப்புலியூரில் 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை படித்தாா். தொடா்ந்து, திருவாரூா் மேட்டுப்பாளையம் பள்ளியில் 4, 5-ஆவது படித்தாா். பின்னா் திருவாரூா் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6, 7-ஆம் வகுப்பு படித்தாா். இதைத்தொடா்ந்து, 8, 9, 10-ஆம் வகுப்புகளை மயிலாடுதுறையில் படித்து, கல்லூரிப்படிப்பை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொடா்ந்தாா். படிப்பை முடித்தபின் 1944 முதல் 1957 வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT