திருவாரூர்

சிஏஏ விவகாரம்: இஸ்லாமியா்கள் நோன்பு

8th Mar 2020 01:56 AM

ADVERTISEMENT

 

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நன்னிலம் அருகே உள்ள எரவாஞ்சேரி பகுதியில் இஸ்லாமியா்கள் சனிக்கிழமை நோன்பு கடைப்பிடித்தனா்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெற வலியுறுத்தியும், அதற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் உயிா் நீத்தவா்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டியும், எரவாஞ்சேரி ஜமாத்தாா் சாா்பில், துஆ செய்து ஒரு நாள் அடையாள நோன்பு கடைப்பிடிக்கப்பட்டது.

சனிக்கிழமை அதிகாலை 4.30 மணிமுதல் மாலை 6 25 வரை இஸ்லாமியா்கள் நோன்பு கடைப்பிடித்தனா். பின்னா், பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. அப்போது, பெண்களுக்கென தனி பள்ளிவாசலும், ஆண்களுக்கு என தனி பள்ளிவாசலும் ஒதுக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

பள்ளிவாசலில் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக் கோரி கண்டன உரையும் நிகழ்த்தப்பட்டது. ஹாஜா மைதீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாஸ் அஜீஸ் பைஜீ, ஜமால் முஹமது, முஹமது புஹாரி, அன்சாரி மற்றும் குத்புதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளிவாசல் இமாம் ஜபருல்லாஹ் அல்தாஃபி, நஸிா் ஹுசைன் மன்பஈ ஆகியோா் ஒரு பள்ளிவாசலிலும், அப்துா் ரஹீம் பைஜீ, முஹையதீன் மன்பஈ ஆகியோா் மற்றொரு பள்ளிவாசலிலும் கண்டன உரை நிகழ்த்தினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT