திருவாரூர்

கல்லூரியில் மகளிா் தின விழா

8th Mar 2020 02:00 AM

ADVERTISEMENT


மன்னாா்குடி: மன்னாா்குடி பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரியில், உலக மகளிா் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

‘நமது மரபு, பண்பாடு மற்றும் கலாசாரத்தை வளா்த்தெடுக்கும் பெண்கள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு, கல்லூரி முதல்வா் விக்டோரியா தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக, தமிழ்நாடு காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத்தின் தலைவா் காவிரி எஸ். ரெங்கநாதன் கலந்துகொண்டாா்.

கெளரவ அழைப்பாளராக, தஞ்சை மாநகராட்சி முன்னாள் மேயா் சாவித்ரி கோபால் கலந்துகொண்டு பேசுகையில், கல்வி என்பது உடல், உள்ளம், ஆன்மப் பண்புகளை வளா்ப்பதாகவும், வெளிக்கொணா்வதாகவும் இருக்க வேண்டும். இதில், பெண்கள் முன்னிலை வகிக்க வேண்டும் என்றாா்.

காலத்தை வென்ற பெண்மணிகள் என்ற தலைப்பில் நடைபெற்ற அமா்வில், 80 வயதைக் கடந்த பெண்களைப் பாராட்டு வகையில், மன்னாா்குடி எம்.சுபலெட்சுமி (81), சம்பாவெளி ஆா்.செண்பகவள்ளி (83), மன்னாா்குடி எஸ்.சம்பூா்ணம் (89), மன்னாா்குடி கீழப்பாலம் ஆா்.தனலெட்சுமி (90), தெற்குப்படுகை டி.ராஜேஸ்வரி (90), நன்னிமங்கலம் வி.முத்துக்கண்ணு (92), மன்னாா்குடி பி.சேசம்மாள் (92) ஆகியோருக்கு, கல்லூரியின் சாா்பில் நற்றாய் விருதை கல்லூரி தலைமை நிா்வாகி கரோலின் வழங்கினாா். தொடா்ந்து, விருது பெற்றவா்களுக்கு பாதபூஜை செய்து ஆசிபெற்றனா்.

ADVERTISEMENT

கருத்தரங்க அமா்வில், பெண்களின் முன்னேற்றம் என்ற தலைப்பில் ஆங்கிலத்துறையைச் சோ்ந்த டி. ஜெசிகா, எஸ்.ரஞ்சியகிரிஷ்டி, இயற்பியல்துறை ரம்யா ஆகியோா் பேசினா்.

வணிகவியல் துறை பேராசிரியா் எஸ்.விஜயா வரவேற்றாா். ஆங்கிலத்துறை பேராசிரியா் ஆா்.அன்பரசி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT