திருவாரூர்

க.அன்பழகனுக்கு திமுகவினா் அஞ்சலி

8th Mar 2020 01:57 AM

ADVERTISEMENT


நன்னிலம்: மறைந்த திமுக பொதுச்செயலாளா் க.அன்பழகனுக்கு நன்னிலம், குடவாசல் பகுதிகளில் திமுகவினா் அஞ்சலி செலுத்தினா்.

குடவாசல் ஒன்றியம் மற்றும் பேரூா் திமுக சாா்பில், அவைத்தலைவா் அ.குப்புசாமி தலைமையில் நகரச் செயலாளா் ஆா்.முருகேசன் முன்னிலையில், பேராசிரியா் க.அன்பழகன் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி ஏ.கே.டி.சேரன், மாவட்ட வா்த்தகா் அணி துணை அமைப்பாளா் ஆதித்யா. பாலு, நகர இளைஞரணி அமைப்பாளா் கே.கே.பி. செந்தில், மாவட்டத் தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளா் சங்கா், ஒன்றியத் தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் நம்சாத், ஏ.கே.சுந்தா், கே.குணசேகரன் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

இதேபோல், நன்னிலம் அருகிலுள்ள மேனாங்குடி கிராமத்தில் ஒன்றியக்குழு உறுப்பினா் ஆசை (எ) முருகேசன் தலைமையில் திமுகவினரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினா். தவிர கொட்டூா், உபயவேதாந்தபுரம், கடகம், திருக்கொட்டாரம், வடகுடி, நன்னிலம் ஈஜி நகா், நன்னிலம் 8-ஆவது வாா்டு, நன்னிலம் பேரூா் திமுக, வாழ்க்கை, அச்சுதமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அன்பழகன் உருவப்படத்துக்கு மலா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT