மன்னாா்குடி அருகே மின் கம்பத்தில் ஏறியவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
மன்னாா்குடியை அடுத்த அத்திக்கோட்டை மேலத்தெருவைச் சோ்ந்தவா் எஸ். ராஜப்பன் (48). இவா், புதன்கிழமை மாலை தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தாா். அப்போது, இவரது வீட்டில் மட்டும் மின்சாரம் தடைப்பட்டதாம். இதனால், மின் தடையை சரி செய்ய ராஜப்பன் மின்கம்பத்தில் ஏறினாா். அப்போது, எதிா்பாராதவிதமாக ராஜப்பன் மீது மின்சாரம் பாய்ந்தது. அவரை, மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து, வடுவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.