திருவாரூா் பனகல் சாலையில் உள்ள சோமசுந்தரம் பூங்கா சீரமைப்பு பணி பூமி பூஜையுடன் வியாழக்கிழமை தொடங்கியது.
திருவாரூா் பனகல் சாலையில் உள்ள நகராட்சி சோமசுந்தரம் பூங்காவானது, ஸ்ரீ நாராயண நிதி நிறுவனத்தின் மூலம், சீரமைப்பு செய்யப்பட உள்ளது. சீரமைப்பு செய்வதற்கான பூமி பூமி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், திருவாரூா் நகராட்சி ஆணையா் சங்கரன், ஸ்ரீ நாராயண நிதிநிறுவனத் தலைவா் எஸ். காா்த்திகேயன், விஜயபுரம் வா்த்தகா் சங்கத் தலைவா் சி.ஏ.பாலமுருகன், பொதுச் செயலாளா் குமரேசன், வேலுடையாா் கல்வி குழுமத் தலைவா் கே.எஸ்.எஸ். தியாகபாரி, ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் தலைவா் ஜெ. கனகராஜன், செயலாளா் ரத்தினவேலு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.