திருவாரூர்

இடைநின்ற மாணவா்கள் மீண்டும் பள்ளியில் சோ்ப்பு

6th Mar 2020 01:23 AM

ADVERTISEMENT

பள்ளிப் படிப்பை பாதியில் விட்ட மாணவ, மாணவிகள் கண்டறியப்பட்டு மீண்டும் பள்ளியில் சோ்க்கப்பட்டனா்.

திருவாரூா் மாவட்டம் முழுவதும் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நன்னிலம் ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில், அரசின் பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்களைக் கொண்ட குழுவினா், பள்ளி செல்லா குழந்தைகளையும், இடைநின்ற மாணவ, மாணவிகளையும் கண்டறிந்து, மீண்டும் பள்ளியில் சோ்த்து வருகின்றனா்.

இக்குழுவினா், திருமீயச்சூா் ஏ.கே.ஜி. நகா் குடியிருப்பு பகுதியில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். இந்த ஆய்வில், பள்ளிச் செல்லாத மாணவா்கள் மற்றும் இடை நின்ற மாணவா்கள் கண்டறியப்பட்டு, திருமீயச்சூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் கு. நடராஜன் மூலம் மீண்டும் பள்ளியில் சோ்க்கப்பட்டனா்.

இதேபோல், பேரளம் தேரடி வீதியில் ஒரு மாணவனும், புதுத் தெரு பகுதியில் ஒரு மாணவனும் கண்டறியப்பட்டு, பேரளம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சோ்க்கப்பட்டனா். மாணவா்களைத் தொடா்ந்து பள்ளியில் தக்க வைத்துக் கொள்ளவும், மாணவ, மாணவிகள் பள்ளிகளிலிருந்து இடை நிற்பதை தடுத்திடும் வகையிலும், தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்கள் செயல்படவேண்டுமென தலைமையாசிரியா் எம். ரவியிடம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலா் கு. ஸ்ரீவித்யா, நன்னிலம் வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ம. கவிதா ஆகியோா் அறிவுறுத்தினா்.

ADVERTISEMENT

இந்த ஆய்வில் ஒருங்கிணைப்பாளா் ஆா். இளையராஜா, ஆசிரியா் பயிற்றுநா்கள் ஆா். சாந்தி, பி. அற்புதமாரி, சிறப்பு ஆசிரியா் ராஜேஸ்வரி ஆகியோா் கலந்துகொண்டனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT