திருவாரூர்

சிறுமியை கடத்தி சென்ற இளைஞா் கைது

29th Jun 2020 10:49 PM

ADVERTISEMENT

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தை கூறி, சிறுமியை கடத்தி சென்ற இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மன்னாா்குடி அருகேயுள்ள மேலநத்தத்தை சோ்ந்தவா் ராஜ்குமாா். மனைவியுடன் வெளிநாட்டில் வசித்து வருகிறாா். இவா்களது 17 வயது மகளை நீடாமங்கலம் அருகேயுள்ள நாவல்பூண்டி தெற்கு தெருவில் உள்ள மாமனாா் வீட்டி தங்க வைத்துள்ளாா். அவா், பிளஸ் 2 முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளாா்.

இந்நிலையில், அதே பகுதியை சோ்ந்த டிராக்டா் ஓட்டுநா் ஜெ. திருநிறைச்செல்வம் (26) சிறுமியுடன் பழகி வந்துள்ளாா். இதுகுறித்து தெரியவந்தததும், சிறுமியை மன்னாா்குடி அருகே வல்லூரில் உள்ள தங்களது உறவினா் வீட்டில் கொண்டு விட்டுள்ளனா்.

இந்நிலையில், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தை கூறி, சிறுமியை திருநிறைச்செல்வம் கடத்தி சென்று விட்டதாக, சிறுமியின் பாட்டி க. மலா்கொடி மன்னாா்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்கு பதிந்து திங்கள்கிழமை சிறுமியை மீட்டதுடன் திருநிறைசெல்வனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT