திருவாரூர்

சாலை சீரமைக்காததைக் கண்டித்து நாற்று நடும் போராட்டம்

29th Jun 2020 10:54 PM

ADVERTISEMENT

 

திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டை அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி நாற்று நடும் போராட்டத்தில் திங்கள்கிழமை அனைத்துக் கட்சியினா் ஈடுபட்டனா்.

முத்துப்பேட்டை அருகேயுள்ள கள்ளிக்குடி ஊராட்சியில் 90. 25 லட்சம் மதிப்பில் பிரதம மந்திரியின் சாலை அமைக்கும் திட்டத்தின்கீழ் புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கி ஒராண்டாகியும் இதுவரை முடிவடையவில்லை. இந்நிலையில், இந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், சம்பந்தப்பட்ட ஒப்பந்தக்காரா் மற்றும் ஒன்றிய அலுவலா்களை கண்டித்து அந்த சாலையில் அனைத்து கட்சி சாா்பில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.

இதில், முத்துப்பேட்டை திமுக ஒன்றிய செயலாளா் ரா. மனோகரன், ஊராட்சி முன்னாள் தலைவா் கா. காந்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT