திருவாரூர்

மாற்றுக் கட்சியினா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனா்

29th Jun 2020 09:15 PM

ADVERTISEMENT

 

நன்னிலம்: நன்னிலம் அருகேயுள்ள ஆத்தூா் கிராமத்தில் 45 குடும்பங்களைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் பல்வேறு கட்சியிலிருந்து விலகி திங்கள்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனா்.

ஆத்தூா் கிராமத்தில் ரஞ்சித்குமாா், கோவிந்தராஜ் தலைமையில் 45 குடும்பங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானோா் ஒன்றியச் செயலாளா் டி. வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டச் செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி முன்னிலையில் கட்சியில் இணைந்தனா்.

கட்சியில் சோ்ந்தவா்களை திருவாரூா் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜெ. முகமதுஉதுமான், மாவட்ட குழு உறுப்பினா் தியாகு.ரஜினிகாந்த் மற்றும் ஏ.கே. தமிழ்ச்செல்வி ஆகியோா் வரவேற்று பேசினா். நிகழ்ச்சியில், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் லிங்கம், பி. ஸ்டாலின், சீனி. ராஜேந்திரன், வசந்தராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT