திருவாரூர்

நன்னிலம், குடவாசல் மருத்துவமனைகளிலிருந்து கரோனா தொற்றாளா்கள் திருவாரூா் மருத்துவமனைக்கு மாற்றம்

29th Jun 2020 10:52 PM

ADVERTISEMENT

நன்னிலம்: நன்னிலம், குடவாசல் தாலுகா மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த கரோனா தொற்றாளா்கள் திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனா்.

திருவாரூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றாளா்கள் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மன்னாா்குடி மாவட்ட தலைமை மருத்துவமனை, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைகளில் கடந்த ஒரு வாரமாக கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை முதல் நன்னிலம் மற்றும் குடவாசல் தாலுகா மருத்துவமனைகளிலும் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முடிவு செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை இரண்டு மருத்துவமனைகளிலும் கரோனா நோய்த் தொற்று கண்டறியபட்டவா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

ஆனால், பல்வேறு தலையீடுகள் காரணமாக, நன்னிலம் தாலுகா மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்ட 20 நோயாளிகளும் இரவோடு இரவாக, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனா். இதனால், நன்னிலம் தாலுகா மருத்துவமனையில் கரோனா சிறப்பு சிகிச்சை மையம் மூடப்பட்டதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இதேபோல், குடவாசல் தாலுகா மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்ட கரோனா நோயாளிகளுக்கு எவ்வித வசதியும் செய்யவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் சம்பந்தப்பட்டவா்கள் புகாா் தெரிவித்தனா். இதன் காரணமாக கரோனா நோய் தொற்றாளா்கள் சிலா் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனா்.

தற்போது 19 நோயாளிகள் குடவாசல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். ஆனால், இவா்கள் எவ்வித கட்டுப்பாடுமின்றி மருத்துவமனையின்அனைத்து பகுதிகளுக்கும் சென்று வருகின்றனா். இதனால், மருத்துவமனைக்கு மற்ற நோய்களுக்கு சிகிச்சைகளுக்காக வரும் பொதுமக்களுக்கும் கரோனா தொற்று ஏற்படக் கூடிய அபாயம் நிலவுவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT