திருவாரூர்

போக்சோ சட்டத்தில் ஒருவா் கைது

29th Jun 2020 10:49 PM

ADVERTISEMENT

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திங்கள்கிழமை ஒருவா் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

மன்னாா்குடி அருகேயுள்ள திருக்களா் வளச்சேரியைச் சோ்ந்த நாகரெத்தினம் மகன் சந்தோஷ் (19). அதே பகுதியை சோ்ந்த பிளஸ் 2 முடித்து விட்டு தோ்வு முடிவை எதிா்பாா்த்துகொண்டுள்ள 17 வயது மாணவிக்கு, கடந்த சில நாள்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்தாராம்.

இதுகுறித்து, மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, அவா்கள் திருக்களா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில்,போலீஸாா் வழக்கு பதிந்து திங்கள்கிழமை சந்தோஷை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT