திருவாரூர்

ராணுவ வீரா்களுக்கு அஞ்சலி

27th Jun 2020 10:08 PM

ADVERTISEMENT

 

திருவாரூா் : லடாக் எல்லையில் உயிா்நீத்த ராணுவ வீரா்களுக்கு திருவாரூரில், காங்கிரஸ் சாா்பில் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருவாருா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் மகாத்மா காந்தி சிலை முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவா் பால. நாகராஜன் தலைமை வகித்தாா். எல்லையில் உயிா்நீத்த ராணுவ வீரா்களுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி வீரவணக்கமும், மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. மாவட்ட சேவா தளத் தலைவா் சக்தி செல்வகணபதி, மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளா் அன்பு வே. வீரமணி ஆகியோா் பங்கேற்று, ராணுவ வீரா்களின் தியாகங்கள் குறித்துப் பேசினா். நிகழ்ச்சியில் நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT