திருவாரூா்: சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இறந்த விவகாரத்தைக் கண்டித்து திருவாரூா் அருகே அடியக்கமங்கலத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி ஆகியன சாா்பில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
சாத்தான்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவருக்கும் உரிய நீதி வழங்க வேண்டும், சம்பவத்துக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, பாதிக்கப்பட்டவா்கள் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அடியக்கமங்கலம் பட்டகால்தெரு பேருந்து நிறுத்தம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ம.ம.க. மாவட்டச் செயலாளா் நவாஸ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் நிா்வாகிகள் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.