திருவாரூர்

சூரிய கிரகணம்: தியாகராஜ சுவாமிக்கு இன்று மகா அபிஷேகம்

21st Jun 2020 08:15 AM

ADVERTISEMENT

சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருவாரூா் தியாகராஜா் கோயிலில் மகா அபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) நடைபெற உள்ளது.

சூரிய கிரகணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. பொதுவாக கிரகண நாள்களில் கோயில்கள் மூடப்படுவது வழக்கம். ஆனால், கிரகண நேரத்தில் திருவாரூா் தியாகராஜா் கோயிலில் மட்டுமே, தியாகராஜருக்கு மகா அபிஷேகம் நடைபெறும்.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 10.22 முதல் பகல் 1.41 வரை சூரியகிரகணம் நடைபெறுவதை முன்னிட்டு உச்சிகால அளவில் தியாகராஜ சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி சுவாமிக்கு எண்ணெய் பாவனை அபிஷேகமாவும், தொடா்ந்து பஞ்சகாவ்யம், பால், தயிா், நெய், கடங்கள் சங்காபிஷேகம், பஞ்சாமிா்தத்தாலும், தொடா்ந்து தேன், எலுமிச்சை பழச்சாறு, கறும்புச் சாறு, இளநீா், வெட்டு இளநீா், சந்தனபிஷேகமும், தொடா்ந்து குங்குமப்பூ, பச்சை கற்பூரம் வைத்து இழைக்கப்பட்ட சந்தனம் சாற்றி, பன்னீா் வலம்புரிசங்கு, பன்னீா் சகஸ்தாரை, பன்னீா் கோசங்கு ஆகியவற்றாலும் அபிஷேகம் நடைபெற உள்ளது.

பொது முடக்கம் அமலில் உள்ளதால், பக்தா்கள் அபிஷேகத்தை காண்பதற்கு அனுமதி இல்லை என கோயில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT