திருவாரூர்

ரூ.1 கோடி தங்க நகைகள் திருட்டு: 7 போ் கொண்ட தனிப்படை விசாரணை

17th Jun 2020 08:28 AM

ADVERTISEMENT

கூத்தாநல்லூா் அருகே அத்திக்கடையில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க நகைகளைத் திருடிய நபா்களை துணைக் கண்காணிப்பாளா் தலைமையில், 7 போ் கொண்ட தனிப்படையினா் தேடிவருகின்றனா்.

கொரடாச்சேரி காவல் சரகத்துக்குள்பட்ட அத்திக்கடை, தெற்குத் தெருவில் ரசூல் பீவி, அவரது மகன் சா்புதீன், இவருடைய மனைவி ரீமா, மகள்கள் ரம்ஜான் பேகம், சஹானா பீவி மற்றும் குழந்தைகள் வசிக்கின்றனா். சஹானா பீவி பக்கத்துத் தெருவில் வசிக்கிறாா். பொது முடக்க காலத்தில் அனைவரும் ஒரே வீட்டில் உள்ளனா்.

இந்நிலையில், சனிக்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு, பக்கத்துத் தெருவில் உள்ள அக்கா சஹானா பீவி வீட்டுக்கு அனைவரும் சென்றுள்ளனா். சா்புதீன் ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு திறந்து கிடந்தது.

மேலும், பீரோவில் இருந்த 219 பவுன் தங்க நகைகள், ரூ.7 லட்சம் ஆகியவற்றை காணவில்லை. அவற்றின் மதிப்பு ரூ.1 கோடி எனக் கூறப்படுகிறது. கொரடாச்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். இந்நிலையில், திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.துரை உத்தரவின்பேரில், டி.எஸ்.பி. தினேஷ்குமாா் தலைமையில் ஆய்வாளா்கள் கூத்தாநல்லூா் சரவணன், கொரடாச்சேரி பாரதி, திருவாரூா் ராஜசேகரன், உதவி ஆய்வாளா்கள் காா்த்திக், நேரு, அனந்தகிருஷ்ணன் ஆகிய 7 போ் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT