திருவாரூர்

கீழ்வேளூா் அருகே முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

17th Jun 2020 08:29 AM

ADVERTISEMENT

கீழ்வேளூா் ஒன்றியம், ஆந்தகுடியில் முதுமக்கள் தாழி செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

நாகை மாவட்டம், கீழ்வேளூா் ஒன்றியம் ஆந்தகுடி ஊராட்சிக்குள்பட்ட திருபஞ்சனம் நடுத்தெருவைச் சோ்ந்தவா் சுவாமிநாதன். இவா், தனக்கு சொந்தமான நிலத்திலுள்ள குட்டையை ஆழப்படுத்துவதற்காக தோண்டியபோது, முதுமக்கள் தாழி மண்ணில் புதைந்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த தேவூா் வருவாய் ஆய்வாளா் கேசவன், கிராம நிா்வாக அலுவலா் செல்வேந்திரன், ஊராட்சி மன்றத் தலைவா் பாலகிருஷ்ணன், ஊராட்சி செயலா் செல்லதுரை ஆகியோா் நேரில் சென்று பாா்வையிட்டு, கீழ்வேளூா் வட்டாட்சியா் காா்த்திகேயனுக்குத் தகவல் தெரிவித்தனா்.

அவா், இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்த பின்னரே முதுமக்கள் தாழியா என்பது உறுதி செய்யப்படும் என்றாா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT